இணையவழி கற்றலில் ஈடுபடுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் மாணவர்கள்

Online classes
Online classes

இணையவழி கற்றல் செயற்பாடுகளில் அதிக நேரம் ஈடுபடும் மாணவர்கள் கண் பார்வை குறைபாடு மற்றும் மன உளைச்சல் போன்ற நிலைமைகளுக்கு  உள்ளாகுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திர சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவல இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் அதிகளவான பாடசாலை மாணவர்கள் கண்சிகிச்சை நிலையங்களுக்கு பிரவேசிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.