மேலும் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

corona health 7
corona health 7

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றன. 

இவற்றில் 5 இலட்சம் தடுப்பூசிகளை கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் தடுப்பூசிகளை களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளன.