காஷ்மீர் விவகாரத்தையும் இலங்கைத் தமிழர் விடயத்தையும் தொடர்புபடுத்தவேண்டாம் – செல்வம் எம்பி!

selvam
selvam

ஜம்மு – காஷ்மீர் விவ­கா­ரத்­தையும் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­கா­ரத்­தையும் தொடர்­பு­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரிவித்துள்ளார்.

அண்­மையில் இந்­திய அர­சாங்கம் அதன் அர­சி­ய­ல­மைப்பின் சரத்து 370 மற்றும் 35 ஏ என்­ப­வற்றை இரத்துச் செய்­ததன் ஊடாக ஜம்மு – காஷ்­மீரின் சிறப்பு அந்­தஸ்தை நீக்கி, அதன் சுயாட்­சியை முடி­விற்குக் கொண்டு வந்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் இலங்­கையின் தமிழர் பிரச்­சி­னைக்கு விரும்­பத்­தக்க தீர்­வொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்கு இந்­தியா அழுத்தம் வழங்­குமா என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில், கூட்­ட­மைப்பு இன்­னமும் இந்­தி­யாவை நம்­பு­கின்­றதா என்று வின­விய போதே செல்வம் அடைக்­க­ல­நாதன் இவ்­வாறு பதி­ல­ளித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­வி­வ­கா­ர­மாகும். அதில் எம்மால் தலை­யி­டவோ அல்­லது கருத்­து­கூ­றவோ முடி­யாது. ஆனால் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகா­ண­சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று இணங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது காலா­வ­தி­யாக கூடி­ய­தொரு ஒப்­பந்­த­மல்ல.

எனவே தற்­போதும் தமிழர் பிரச்­சினை தொடர்பில் நியா­ய­மான உரிய தீர்வை வழங்­கு­வ­தற்­கான அழுத்­தத்தை பிர­யோ­கிக்க வேண்­டிய தார்­மீகப் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உண்டு. அத­ன­டிப்­ப­டையில் அவர்­க­ளு­டைய கட­மையை அவர்கள் நிறை­வேற்ற வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலாநாதன் தெரிவித்துள்ளார்.