வவுனியா மக்களிற்கான தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கப்பெறும் – டக்ளஸ்

a8fffb3f7b29e1ee324cd0914dcbc89b XL
a8fffb3f7b29e1ee324cd0914dcbc89b XL

வவுனியா மக்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும். என்று கடற்தொழில் நீரியல்வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மிகவிரைவில் வவுனியா மக்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும். அத்துடன் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன்.
அந்த காணிகளின் விபரங்களை உரிய அமைச்சர் கேட்டுள்ளார். எனவே ஓரிரு மாதங்களில் அந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்று நம்புகிறேன்.

வடக்கில் புரவிப்புயலில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பித்திருக்கின்றோம். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் அதன் முடிவுகள் எட்டப்படும்.

மக்கள்நலன் கருதியே இரசாயன பசளைக்கு பதிலாக சேதன பசளைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை அரசாங்கம் செயற்படுத்தியது. எதிர்வரும் வருடத்தில் இருந்தே அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகள் எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.