விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள்

அஜித் ரோஹண 1 1
அஜித் ரோஹண 1 1

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் பெரிய வாகனங்களின் ஓட்டுனர்களே குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.