மட்டு சந்திவெளியில் வெடிபொருள் மீட்பு

WhatsApp Image 2021 07 16 at 13.52.16
WhatsApp Image 2021 07 16 at 13.52.16

மட்டக்களப்பு சந்திவெளி பகுதி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான இன்று பகல் சந்திவெளி பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இருந்து வெடிபொருள் ஒன்றை காவல்துறையினர் இராணுவத்துடன் இணைந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.