அடம்பன் மகா வித்தியாலயத்திற்கு தொழில் நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

3 2
3 2

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலைக்கு சுமார் 40.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3 மாடிகளைக் கொண்டு தொழில் நுட்ப ஆய்வு கூடம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் பரஞ்சோதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன், பங்குத்தந்தை மற்றும் வடமாகாண கல்வித்திணைக்கள பொறியியலாளர் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

இதன் போது பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு பிரதி நிதிகள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.