வாழைச்சேனையில் 410 மூடை சிப்பிகளை கடத்திச் சென்ற மூவர் கைது !

WhatsApp Image 2021 07 17 at 06.21.10
WhatsApp Image 2021 07 17 at 06.21.10

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கனரகவாகனமான கெண்டனர் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை கடத்தி செல்லப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (17) அதிகாலையில் வாழைச்சேனை நாவலடிசந்தியில் வைத்து 3 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

WhatsApp Image 2021 07 17 at 06.21.11


வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கொழும்பு திருகோணமலை பிரதான வீதிச்சந்தியான நாவலடிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் வீதிச்சோதனை நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இதன்போது வாழைச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கெண்டனர் ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர் இதன்போது சட்டவிரோதமாக தலா 50 கிலோ கொண்ட 410 மூடை சிப்பிகளை குருநாகலுக்கு கடத்திச் செல்வதாக கண்டறிந்ததையடுத்து அதனை கடத்திச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் சிப்பியுடன் கெண்டனர் வாகனத்தை மீட்டு வாழசைச்சேனை காவற்துறையினரிடம் ஓப்படைத்துள்ளதாகவும்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.