மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா

20210717 102847
20210717 102847

மன்னாரில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று (17) காலை 10.30 மணியளவில் மன்னார் அன்னை இல்லத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாவட்ட அரசாங்க அதிபரினால் மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.