தொழிற்சங்கங்கள் இணைந்து சம்மேளனம் ஒன்றை உருவாக்க தீர்மானம்

download 2 29
download 2 29

மலையகத்தில் இயங்குகின்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், கூட்டு தொழிற்சங்க கமிட்டி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களில், தொழிற்சங்க கட்டமைப்பு சிதறடிக்கப்படுமாக இருந்தால், தொழிலாளர்கள் உதிரிகளாவதுடன், முழுமையாக இராணுவ அடக்குமுறைக்கு சமமான வகையில், தோட்டங்கள் நிர்வகிப்படுவதற்கான செயற்பாடுகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில், தேசிய பெருந்தோட்ட சம்மேளனத்திற்கு உட்பட்டு, வழிகாட்டல் குழு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க, தோட்ட மட்டங்களில் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், வேறுபாடுகளை களைந்து செயற்பட வேண்டும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.