நாட்டில் நேற்று 1,420 பேருக்கு கொவிட் தொற்று!

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

நாட்டில் நேற்று 1,420 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்களில், 1,402 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 284,932 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 24,523 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 நோயால் மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 நோயால் மரணித்தோர் எண்ணிக்கை 3,779 ஆக அதிகரித்துள்ளது. 30 ஆண்களினதும், 16 பெண்களினதும் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 8 ஆண்களினதும், 5 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட 22 ஆண்களினதும், 11 பெண்களினதும் மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது