மட்டு வைத்தியசாலைக்கு 10 இலச்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

IMG 4833
IMG 4833

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பயன்படுத்தும் 10 இலச்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கம் மட்டு போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இன்று திங்கட்கிழமை(19) மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் ஊடாக வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் இலங்கை சாரண சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க உலக சாரணர் சங்கத்தினாலும் சென் தோமஸ் பழைய சாரணர் சங்கத்தினால் 10 இலச்சம் ரூபா பெறுமதியான கொரோனா வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வந்தனர்.

இதன் பிரகாரம் இந்த வைத்திய உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது இதில் மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன், மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் மற்றும் சாரணர் சங்கத்தினர் கலந்துகொண்டு மட்டு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் துறை விசேட வைத்திய நிபுணர் பி.தேவகாந், மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரிகளிடம் இந்த வைத்திய உபகரணங்களை வழங்கிவைத்தனர்.