ரணில் தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

MAHINDA YAPA 700x375 1
MAHINDA YAPA 700x375 1

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெறுவதற்கு முன்னர் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.