சேதன பசளை தயாரிப்பு தொடர்பில் விவசாயிகளுக்கான செயன்முறை பயிற்சி!

received 812985932915838
received 812985932915838

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதன பசனை தயாரிப்பை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கில் செயன்முறை பயிற்சி திட்டம் ஒன்று ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் 20.07.21 இன்று நடைபெற்றுள்ளது.

விவசாய அமைச்சின் கீழ் காலநிலைக்கு சீரான விவசாய செய்கை திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயம் தொடர்பிலான செயன்முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் மத்தியில் சேதன பசளை உற்பத்தியினை ஊக்கிவிக்கும் நோக்கில் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையின் முகாமையாளர் கீ.கீர்த்திகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யா.சசீலன் வடமாகாண காலநிலைக்கு சீரான விவசாய திட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிபுணர் ஆர்.சஞ்சீவன் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இதன்போது விவசாய செய்கைக்கான இயற்கை உரம் தயாரித்தல்,அசோலாபாசி உற்பத்தி,களை நாசினி தயாரித்தல்,போன்றவை தொடர்பில் செயன்முறையூடாக விவசாய போதனாசிரியர்களினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சேதன பசளை செய்கைக்கு அரசாங்கம் ஊக்கிவிப்பு வழங்கிவரும் நிலையில் சேதன பசளை தொடர்பில் விவசாயிகளுக்கான அறிவூட்டும் செயற்பாடுகள் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் இயற்க்கை விவசாயம் மற்றும் சேதன பசளை தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பகுதி விவசாய போதனாசிரியர்கள் ஊடாக விண்ணப்பித்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தாம் வழங்க தயாராக இருப்பதாக ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையின் முகாமையாளர் கீ.கீர்த்திகன் தெரிவித்துள்ளார்.