மோட்டார் சைக்கிளைத் திருடியவர் கைது

kaithu
kaithu

மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள், ஒரு வாள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்தனர்.