டெல்டா வைரஸ் தொற்றையடுத்து ஆடைத்தொழிற்சாலைக்குப் பூட்டு!

garment worker 647x420 1 300x195 1
garment worker 647x420 1 300x195 1

டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் இனங்காணப்பட்டதையடுத்து கொழும்பு, கெஸ்பாவை ஜபுரளிய, லுல்லவல வீதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை 10 தினங்களுக்குத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனக் கெஸ்பேவ பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி சமந்திகா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 121 ஊழியர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வந்ததையடுத்து தொழிற்சாலையில் 166 ஊழியர்கள் எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.