ஆசிரியரின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

image b574cb0006
image b574cb0006

“இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை இப்போது வழங்குவது சாத்தியமில்லை. இதை ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.”

  • இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நான் 100 வீதம் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட நலன்புரி நடவடிக்கைகளைச் செய்வதானால், மேலதிகமாக வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நாட்டில் மேலதிக வரி விதிப்புகளைச் செய்தால், பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள்” – என்றார்.