முல்லைத்தீவில் மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல்

IMG 20210727 WA0017
IMG 20210727 WA0017

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வுகளை தடுத்தல் நோக்கில் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (27) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பொறுப்புடைய தலைவர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

வழமையாக முல்லைத்தீவு மாவட்டத்தில்  இடம்பெறும் காதர் மஸ்தான் அவர்களின் நிகழ்வுகள் அனைத்துக்கும் முல்லைத்தீவின் அனைத்து ஊடகங்களுக்கும்  அழைப்பு விடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு  பாரிய பிரச்சனையாக காணப்படும் மணல் கிரவல் அகழ்வு தொடர்பான விடயம் தொடர்பில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்படாமை குறித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது