யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Death body 720x450 1
Death body 720x450 1

சுன்னாகம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.