சம்பிக்க தொடர்பில் பூஜித விடம் விசாரணை

625.500.560.350.160.300.053.800.900.160.90 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 5

வெலிக்கடை – இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பாகபல்வேறு தரப்பினரிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு வருகின்றன

அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது .

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினாரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.

இதேவேளை குறித்த வாகன விபத்து இடம்பெற்ற காலத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயன்படுத்திய தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கையை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தொலைபேசி நிறுவனங்கள் சிலவற்றுக்கு உத்தரவிட்டுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.