வவுனியாவில் முறைகேடாக நடந்த சாரதி: செருப்பை கையில் எடுத்த பெண்

1576209401 three wheel 2
1576209401 three wheel 2

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் காத்திருந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் அவ்வீதியால் தனிமையில் நடந்து சென்ற பெண்மணி ஒருவரிடம் முறைகேடாக நடந்துகொள்ள முற்பட்டுள்ளார் . இதையடுத்து குறித்த பெண்மணி தனது காலில் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து அறைவேன் என்று சாரதியை அச்சுறுத்தியுள்ளார் . 

இச்சம்பவம் குறித்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தலைவருக்கு பெண்மணியினால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .

வவுனியா கண்டி வீதி , மன்னார் வீதியை இணைக்கும் பிரதான வீதியில் காவற்துறை காவலரண் அருகில் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இன்று (31) பிற்பகல் முச்சக்கரவண்டி அருகில் காத்திருந்த சாரதி ஒருவர் அவ்வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் முறைகேடான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளதுடன் தகாத வார்த்தைப்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் . இதையடுத்து குறித்த பெண் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து அறைவேன் என்று சாரதியை அச்சுறுத்தியுள்ளார் . 

குறித்த பகுதியில் காவற்துறையினர் காவல் கடமையில் ஈடுபட்டுவருவது வழமை. எனினும் இன்று இச்சம்பவம் இடம் பெற்றபோது காவற்துறையினர் கடமையில் இருக்கவில்லை . இச்சம்பவம் குறித்து உடனடியாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவருக்கு  குறித்த பெண்ணால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

அப்பகுதியானது தாய்மார் . கர்ப்பவதிகள் வைத்திய சுகாதாரப்பணிமனைக்கு சென்று வருவதும் வைத்தியர்கள் , தாதியர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்காக வைத்தியர்கள் விடுதிக்கு செல்லும் பிரதான பகுதியாகும் இவ்வாறான ஒரு பகுதியில் பெண்களை கேலி செய்யும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அங்கிருந்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பல நல்ல பண்புடைய சாரதிகளுக்கு அவப்பெயர்களையும் அவர்களது கடமைகளுக்கு களங்கமும் ஏற்பட்டும் வருகின்றது . 

குறித்த சாரதியை அத்தரிப்பிடத்தில் நிறுத்துவது எதிர்காலத்தில் பல்வேறு முறைகேடான சம்பவங்களை அரங்கேற்றுவதற்கும் அதிகரிப்பதற்கு வித்திடப்போகின்றது என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதில் தலையீடு செலுத்தி பெண்கள் சிறுவர்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் ,