728, 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

vikatan 2020 09 51ec2dbc 222a 4d5b 8ea1 7f74729429fb coronavirus vaccine syringe 1308 48080
vikatan 2020 09 51ec2dbc 222a 4d5b 8ea1 7f74729429fb coronavirus vaccine syringe 1308 48080

கொவெக்ஸ் திட்டம் ஊடாக ஜப்பான் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.

7 லட்சத்து 28 ஆயிரத்து 460 தடுப்பூசிகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை இலங்கையில் ஏலவே அஸ்ட்ராசெனகாவை முதலாவது தடுப்பூசியாகப் பெற்றுக் கொண்ட 5 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கான இரண்டாம் செலுத்துகைக்காக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 5 லட்சத்து 26 ஆயிரம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர்.

அந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.