மட்டு. நாவற்குடா தெற்கில் 69 பேருக்கு கொரோனாவால் நேற்று முதல் முடக்கம்!

39a8ad0f cfba0dc7 india curfew 850x460 acf cropped
39a8ad0f cfba0dc7 india curfew 850x460 acf cropped

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள நாவற்குடா தெற்கு பகுதியில் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு தொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கிராமசேவகர் பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை (03) முதல்  முடக்கி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் உதயகுமார் தெரிவித்தார்.

 குறித்த பகுதியில் கடந்த 2 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் 69 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  கிராம சேவகர் பிரிவை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் முடக்கி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதேவேளை அந்த பகுதியில் இருந்து எவரும்  வெளியே வரமுடியாது உள்ளே நுழையவும் முடியாதவாறு காவல்துறையினர் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.