வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம்

Police Station 3 720x480
Police Station 3 720x480

புதிய ஜனாதிபதி கோட்டபாயவின் வருகையை அடுத்து வவுனியா மாவட்டபொலிஸ்நிலையம் வவுனியா காவல்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

ஜனாதிபதி கோட்டபாய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியிலான பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.