ஒரு நாள் விடுமுறை; தாதியர்கள் பாதிப்பு

nurse
nurse

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தாதியர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்கமுடியாது எனவும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுக்கமுடியும் எனவும் நேற்றையதினம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் கவனத்திலெடுத்து தாதியர்களின் நலனுக்காக வழிவகை செய்துதருமாறு தாதியர்கள் தெரிவித்துள்ளனர்