ராஜிதவை கைது செய்வதற்கு பிடியாணை

rajitha
rajitha

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அளித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டாரா நெலும்தெனிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ரஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியானை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கோரியிருந்த நிலையில் அவரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ராஜித சேனாரத்ன எந்நேரத்திலும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியமுள்ளது,

இந்நிலையில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி விண்ணப்பித்திருந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.