யாழ்ப்பாணத்தில் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் திறப்பு!!

IMG 7207
IMG 7207

யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த மரத்தை அமைப்பதற்கு இரும்பு குழாய்கள்,வைக்கோல் மற்றும் 1100 பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் என்பவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தை அமைப்பதற்கு 15 பேர் கொண்ட குழுவினரால் 10 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்களில் இதுவே மிக உயரமானதாக கருதப்படுகிறது.