வவுனியாவில் 44 பேருக்கு கொரோனா!

4 coronavirus1 1584949824 1585047469 1585392952
4 coronavirus1 1584949824 1585047469 1585392952

வவுனியாவில் 44 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், வேலன்குளம் இராணுவ முகாமில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகா நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தைப் பகுதியில் இருவருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தை காவல் நிலையத்தில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், மூன்றுமுறிப்பு இராணுவ முகாமில் எட்டு பேருக்கும், மாமடுவ பகுதியில் ஒருவருக்கும், பூனாவ பகுதியில் ஒருவருக்கும், அட்டமஸ்கட பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் நான்கு பேருக்கும், வைத்தியர் விடுதியில் ஒருவருக்கும், சின்னசிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறைச்சாலை காவலாளி ஒருவருக்கும் என 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.