கொழும்பில் வசிப்பவர்களுக்கு இன்றும் தடுப்பூசி

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்திலும், தெமட்டகொட வித்யாலங்கா பிரிவெனாவிலும் இன்று (13) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் மேற்படி தடுப்பூசி செலுத்தல் மையங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.