யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்!

IMG 6115
IMG 6115

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு (12.08.2021) வியாழக்கிழமை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக துவிச்சக்கர வண்டியில் யானைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு சிறுவர்களிடையே யானைகள் பற்றிய அறிவினை விருத்தி செய்யும் நோக்குடன் சிறு நடைபயணமும், யானை பற்றிய கதைகளும் கூறப்பட்டது. இவ் விழிப்புணர்வு பிரச்சாரம் யானை விரும்பி மனோகரன் சசிகரனின் தலைமையில் நடைபெற்றது.