மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3 பேர் கொரோனாவால் பலி

WhatsApp Image 2021 06 07 at 10.54.55
WhatsApp Image 2021 06 07 at 10.54.55

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுது மாவட்டத்தி தொற்றாளர் 11905 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் வவுணதீவில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், வாழைச்சேனையில் ஒருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 146 ஆக அதிகதித்துள்ளது.

அதேவேளை  மட்டக்களப்பில் 109 பேருக்கும், களுவாஞ்சிக்குடியில் 31 பேருக்கும், வாழைச்சேனையில் 14 பேருக்கும்,காத்தான்குடியில் 7 பேருக்கும், ஓட்டமாவடியில் 12 பேருக்கும் கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும், செங்கலடியில் 37 பேருக்கும், வாகரையில் 32 பேருக்கும், பட்டிருப்பில் 3 பேருக்கும், வெல்லாவெளியில் 16 பேருக்கும், ஆரையம்பதியில் 6 பேருக்கும், கிரானில் 13 பேருக்கும் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கும் ஏறாவூரில் ஒருவர் உட்பட 299 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது 

தொடர்ந்து ஒருவாரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர் 200 தொடக்கம் 300 வரையிலானவர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். எனவே தடுப்பூசி ஏற்றி விட்டோம் என தேவையற்ற விதத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டில் முடங்கியிருந்தால் மாத்திரம் இந்த கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் ஆகவே பொதுமக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.