மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்ய பிரதமர் பணிப்புரை!

download 14
download 14

தாம் கடற்தொழில் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை மீள முன்னெடுத்து செல்லுமாறு வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பணிப்புரை வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்தொழில் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், நாடு முழுவதும் கடலோர மற்றம் குளங்களை அண்டிய பிரதேசங்களில் 60க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை அமைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மீனவ கிராமங்களின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து அந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இராஜாங்க அமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

நிவாரணம் வழங்குவது தொடர்பில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கக்கூடிய யோசனைகளை முன்வைக்குமாறும், புதிதாக மீனவ கிராமங்களை அமைப்பதற்கான இயலுமைகள் தொடர்பில் ஆராயுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.