விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை!

images 5
images 5

சிறைச்சாலையினுள் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையினுள் நெரிசலை குறைப்பதற்காக சிறைச்சாலை ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் விசேட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபரால் காவல்துறையினருக்கு விசேட சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

முக்கியமான வழக்குகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் கைதிகள் தவிர ஏனையோரை விளக்கமறியலில் வைப்பதை தவிர்க்குமாறு அந்த சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களில் பிணை வழங்குமாறும் விளக்கமறியலில் உள்ள கைதிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட கொவிட் தொற்றுபரவலை தடுப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையாக 14,000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.