விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்களை வைத்திருந்த இருவர் கைது!

puththagam vaazhum 369
puththagam vaazhum 369

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் மற்றும் பல்வேறுப்பட்ட குற்ற ஆவணங்களை வைத்திருந்த சந்தேகநபர் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர், சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய ஏழு இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்களை கடத்திய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களின் வளாகங்களிலேயே இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். குறித்த சோதனை நடவடிக்கையின்போது இரண்டு சந்தேகநபர்கள் கடந்த 2021 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், பல்வேறுப்பட்ட குற்ற ஆவணங்கள், சிம் அட்டைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட ஏழு இலத்திரனியல் சாதனங்களை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.