யாழில் இன்று மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

f51ed27a 66cb 47a6 a6ae 1ee94ceec062
f51ed27a 66cb 47a6 a6ae 1ee94ceec062

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185ஆக உயர்வடைந்துள்ளது.