சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 3 ஆம் கட்ட தடுப்பூசிகளை வழங்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1530856500 gmoa 2
1530856500 gmoa 2

நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு சுகாதார ஊழியர்கள் தொற்றுறுக்குள்ளாகும் போது சுகாதாரத்துறை துரிதமாக சரிவடையக் கூடும் என்பதால் , சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது நாட்டில் நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு சுகாதார ஊழியர்கள் தொற்றுறுக்குள்ளாகும் போது சுகாதார கொள்ளளவும் பாதிப்படையக் கூடும்.

இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் சுகாதார ஊழியர்கள் பெரும்பாலும் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றவர்களாக உள்ளனர்.

எனவே அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிப்பதற்கு செயலூட்டியாக மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சை வலியுறுத்துகின்றோம்.