தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 186 பேர் கைது

thanimai 1
thanimai 1

இன்று காலை  நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 186 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்த கடந்த ஒக்டோபரிலிருந்து இதுவரையில் 55, 842 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாண எல்லைப்பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 சோதனைச் சாவடிகளில் மேல் மாகாணங்களில் இருந்து வெளியேறிய 735 வாகனங்களும் 1,261 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறே மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 787 வாகனங்களும், 1, 437 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டினை மீறி மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்க முயன்ற 191 வாகனங்கள் மற்றும் 471 நபர்கள் திருப்பியனுப்பப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.