ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள ஆசியாவின் உயர்ந்த கட்டடம்!

 கோபுரம்
கோபுரம்

ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் இம்மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் குறித்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அடையாளமாக அமையப்போகும் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்ட பணத்தை 14 வருடங்களில் ஈடுசெய்ய முடியும் என இத்திட்டத்தைத் தயாரித்த பேராசிரியரின் சமிந்த மாணவாடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களின் பின்னர் ஈட்டப்படும் வருமானம் நாட்டுக்கு இலாபமாக அமையும்.

இந்த அடையாளச் சின்னமானது பகல் வேளைகளில் மாதிரமன்றி இரவுவேளைகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் அணைந்து அணைந்து எரியக்கூடிய மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டதாக அமையவுள்ளது.

கோபுரத்தின்அமைப்பு

இந்த கோபுரம் மொத்தமாக 7 மாடிகளைக் கொண்டது, குறித்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர் அல்லது 1153 அடிகள் ஆகும், 50 தொலைக்காட்சி சேவைகள், 35 FM வானொலி நிலையங்கள், மற்றும் 20 தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு, பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது, இதில் லக்ஸரி ஹோட்டல்ஸ் , 1000 பேர் அமரக்கூடிய அரங்கு, கன்பிரன்ஸ் ஹோல், எக்ஸிபிசன் ஹோல், சூப்பர் மார்கட்ஸ், சுவிம்மிங் பூல், பூங்கா போன்ற பல வசதிகளும் அடங்கியுள்ளது.

இக்கேபுரம் முடிவுற்றால் இலங்கையின் தொடர்பாடல் தொழில்நுட்பம் பன் மடங்காக உயரும் என நம்பப்படுகிறது