நாட்டில் குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 3, 44381 ஆக அதிகரிப்பு

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீடுகளிலிருந்து சிகிச்சை வழங்கும் கொவிட் ஒன்றிணைந்த மனைசார் சேவையின் கீழ் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பதிவு செய்து நோயாளிகள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்

மேலும் 2222 கொவிட் நோயாளர்கள் குணமடைந்து ​நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதன்படி, நாட்டில் குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.