வவுனியா சதொசாவில் சீனிக்குத் தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

IMG 20210902 WA0001
IMG 20210902 WA0001

வவுனியா சதொசா விற்பனை நிலையத்திற்கு இன்று காலை சென்ற மக்கள் சீனி உட்பட பல்வேறு அத்தியாவசியமான பொருட்கள் இன்றித் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்துள்ளது . 


இலங்கையின் தென்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட சீனி மூட்டைகள் அரச அதிகாரிகளினால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் இன்று சதொசா விற்பனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் சீனி இன்றி திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் பதுக்கிவைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான சீனிக்கு என்ன நடந்தது ஏன் அவற்றை பொதுமக்களுக்கு விநியோகிக்கவில்லை தனியார் துறையினர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் எழுவதாகவும் அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் .

 
கடந்த மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை பயணத்தடை ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அன்றிலிருந்து சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் தனியார் வர்த்தக நிலையங்களில் 220 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது . இந்நிலையில் அரசாங்கத்தினால் சதொசா விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என்று மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.