மட்டக்களப்பில் கொரோனா உயிரிழப்பு 226 ஆக அதிகரிப்பு!

IMG 5633
IMG 5633


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 199 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 226 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றாளர் 16.199 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று வெள்ளிக்கிழமை (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் 226 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 64 பேருக்கும், ஆரையம்பதி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேருக்கும், வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 4 பேர் வீதம் 8 பேருக்கும், மட்டு போதனா வைத்தியசாலையில் 4 பேருக்கும், பொது சுகாதார ஊழியர்கள் 4 பேருக்கும் கோறளைப்பற்று, வாகரை, பட்டிருப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா இருவர் வீதம் 6 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் மட்டு சிறைச்சாலை கைதிகள் 3 பேர் உட்பட 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் 16.199 ஆக தொற்றாளர் அதிகரித்துள்ளதுடன் கடந்த வாரத்தில் 1601 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது

நாளாந்தம் கொரோனா தொற்றாளர் அதிகரித்துவருவதுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றது எனவே பொதுமக்கள் முதலில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதுடன் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் அத்துடன் சுகாதார வழிமுறைகளைப் பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.