மட்டு காவல் நிலையத்தில் கொரோனாவினால் ஒருவர் உயிரிழப்பு, 85 பேர் குணமடைவு!

IMG 20210902 WA0038 1
IMG 20210902 WA0038 1

மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் 3 வது கொரோனா அலையில் இதுவரை ஒரு காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (3) காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைமைக காவல் நிலையத்தில் சுமர் 600 காவல்துறையினர் கடமையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறையில் சென்றுவரும் மற்றும் கடமையிலுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றோம். 

இதில் இன்றுவரை 85 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளனர். அதேவேளை இங்கு கடமையாற்றும் காவல்துறை சாஜன் ஒருவர் நீரிழிவு நோய்க்காக கொழும்பு காவல்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இருந்தபோதும் விடுமுறைக்கு வீடுகளுக்கு சென்று திரும்பும் காவல்துறை உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் கடமையில் ஈடுபடுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.