ராஜித உரிய நேரத்தில் நீதிமன்றில் ஆஜராவார்- சம்பிக்க ரணவக்க

rajitha and ranavakka
rajitha and ranavakka

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சரியான நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாவார் என்றும் அது தொடர்பில் யாரும் குழப்பமடையத் தேவையில்லையென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எதிர்வரும் 30ம் திகரி அவரது முன்பிணை மனு மீதான விசாரணை இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் சரியான வேளையில் நீதிமன்றில் ஆஜராவார் எனவும் நீதிமன்ற உத்தரவை அவர் மீறப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் எம்மை சவாலாக கருதுவதாக அமைவதாகவும் தாம் உருவாக்கிய சுதந்திரமான நீதித்துறையின் பிரகாரம் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார்.