யாழில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Corona Death 1
Corona Death 1

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும்  உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 99 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவச் சான்றிதழ்  வழங்கப்பட்டது. அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது. மந்திகை ஆதார மருத்துவமனை கொவிட்-19 விடுதியில் சிகிச்சை பெற்ற  பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர்  உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்வடைந்துள்ளது.