அம்பாறை கஞ்சிக்குடியாறு புலிகளின் முகாமாக இருந்த பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு!

WhatsApp Image 2021 09 05 at 16.16.22
WhatsApp Image 2021 09 05 at 16.16.22

அம்பாறை கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக  இருந்த பகுதியில் எல்.எம்.ஜீ, துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (5) மீட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவு திருக்கோவில் பிரதேச பெறுப்பாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திருக்கோவில் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பெறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான காவல்துறையினர் விசேட புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கஞ்சிக்குடியாற்றில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்த மலசல கூடத்துக்கு அருகில் கைவிடப்பட்டு துருப்பிடித்த எல்.எம்.ஜீ ரக துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.

அதேவேளை அந்த பகுதியிலுள்ள மலைகுகையில் இருந்து உள்ளூர்தயாரிப்பு துப்பாக்கி இரண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்