இலவசமாக வழங்கப்படும் 169 பசளை மூடைகளை பதுக்கிய நால்வர் கைது!

21 610ca99f6dc8a
21 610ca99f6dc8a

மட்டக்களப்பு – கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில்,  பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோகிராம் நிறையுடைய 169 பசளை மூடைகள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்காக இலவசமாக வழங்கப்படும் குறித்த பசளை மூடைகள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக குறித்த பசளை மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.