மட்டு நகரில் போதை பொருள் வியாபாரி ஒருவர் 2 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 2 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப்படையினர்  நேற்று திங்கட்கிழமை (06) பிற்பகல் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான  நேற்று பிற்பகல் குறித்த வீதியிலுள்ள வீட்டை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது போதை பொருள் வியாரி ஒருசிறிய பெட்டி ஒன்றில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 2 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்

இந்த நிலையில் பிரதான போதை பொருள் வியாபாரியான இவர் தனியார் பஸ் வண்டியில் நடத்துனராக கடமையாற்றி வருவதாகவும் போதைப் பொருளை விற்பதற்காக பொதி செய்து ஆயத்தமாக இருந்தபோது விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இதில் கைது செய்யப்பட்டவரின் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினர் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் முற்றுகையிட்ட போது பிரதான வியாபாரியான இவரும் இவரது தாயாரும் தப்பி ஓடியுள்ள நிலையில் அங்கு 15 கிராம் ஜஸ் போதைப் பொருள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களுடன் ஒருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.