பசறையில் 49 பேருக்கு கொவிட் தொற்று!

corona 2
corona 2

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் 49 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னதாக தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 38 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பசறை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டஅன்டிஜன் பரிசோதனையில் 11 நோயாளர்களும் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 29 பேர் மீதும்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.