கனகராயன்குளம் பகுதியில் விபத்து: ஒருவர் பலி!

IMG 0d025bd73bb6508bf3e567720e2d44d3 V
IMG 0d025bd73bb6508bf3e567720e2d44d3 V

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IMG ffce596b0ea15ce2ff023358304ca09f V

இன்று (08) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கப்ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில்  சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

IMG 8a162820c86b5a88b06cbfe7697d11e5 V

விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் காவற்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.