நேற்று 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

IMG 3880d1bf3978f4b42621faf95eef82d7 V
IMG 3880d1bf3978f4b42621faf95eef82d7 V

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 429,515 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 126,272 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 278,788 பேர் சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியினையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் அதன் இரண்டாம் தடுப்பூசிகள் 78 இலட்சத்து 48 ஆயிரத்து 922 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் 2,373 பேர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டுள்ளதோடு 332 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் 19,956 பேர் பைஸர் இரண்டாம் தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில்,  834 பேர் பைஸர் முதலாம் தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.